சனி, 16 ஆகஸ்ட், 2014

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்குக

     Theekkathir  செய்தி                   

ஈரோடு,ஆக.16- பிஎஸ்என்எல் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோட்டில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெருந்துறை, பவானி பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 16-ம் தேதி ஆகியும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே கான்ட்ராக்டரை உடனே பட்டுவாடா செய்ய உத்திரவிட வலியுறுத்தியும், மாவட்டம் முழுவதும் பிரதிமாதம் 7-ம் தேதிகுள் அனைவருக்கும் சம்பளம் வழங்கிட கோரியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்ப்ந்த தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஈரோடு ஜிஎம் அலுவலகம் முன்பு 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்த் தலைவர் என்.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கண்டன முழக்கம் எழுப்பினார். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவித் தலைவர் எல்.பரமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.