புதன், 17 டிசம்பர், 2014

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 

பிஎஸ்என்எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு, டிச. 11-
பிஎஸ்என்எல் நிறுவனத்தை தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பிஎஸ்என்எல் நிறுவனத்தின் உயர்பதவிக்கான சிஎம்டி பதவியை உடனடியாக நிரப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு வருமானம் ஈட்டக்கூடிய தொலைபேசி டவர்களையும், பிராட் பேன்ட் சேவையையும் தனி நிறுவனமாக மாற்றும் முயற்ச்சியை கைவிட வேண்டும்.
எம்டிஎன்எல்-பிஎஸ்என்எல் இணைப்பு மற்றும் டிலாய்ட் கமிட்டி பரிந்துரைகளை கைவிட வேண்டும். கிராமப்புற சேவை கொடுக்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அதற்கான இழப்பீட்டை அரசு நிர்வாகம் கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு பகுதிகளில் கோரிக்கைகள் விளக்க ஆர்ப்பாட்டங்கள் மற்றும் விளக்க கூட்டங்கள் நடைபெற்றன.
ஈரோடு மாவட்டத்தில் டி.ஈ எக்ஸ்டர்னல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.கதிர்வேல், எம்.சம்பத்குமார், ஜெகநாதன் ஆகியோர் தலைமை தாங்கினர். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்டச்செயலாளர் எல்.பரமேஸ்வரன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். மாநில அமைப்புச் செயலாளர் வி.மணியன், கிளைச்செயலாளர் ஆர்.தம்பிக்கண்ணன், என்எப்டிஇ கிளைச் செயலாளர் பி.கதிர்வேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். எஸ்என்இஏ மாவட்டச் செயலாளர் சி.பரமசிவம் கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினார்.இதேபோன்று ஈரோடு பொதுமேலாளர் அலுவலகம் முன்பு கே.அய்யாவு, டி.ராஜேந்திரன், சரவணகுமார் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் ஏஐபிஎஸ்என்எல்இயுஏ மாவட்டத் தலைவர் கே.கே.தண்டபாணி மற்றும் ராஜி, சுந்தர், எஸ்.சதாசிவம், சரவணமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பிஎஸ்என்எல்இயு மாவட்டச் செயலாளர் பரமேஸ்வரன்ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கோபிசெட்டி பாளையம் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பிஎஸ்என்எல்இயு கிளைச் செயலாளர் டி.என்.பழனியப்பன், என்எப்டிஇ முருகசாமி மற்றும் பி.யு.தர்மலிங்கம், டி.பி.சண்முகம் ஆகியோர் தலைமை வகித்தனர்.
எஸ்என்இஏ பாலசுப்பிரமணியம், என்ஆர்டிஇ ஆறுமுகம், பிஎஸ்என்எல்இயு செந்தில்நாதன், டிஇபியு செல்வன் ஆகியோர் வாழ்த்துரை வழ

சனி, 16 ஆகஸ்ட், 2014

பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்குக

     Theekkathir  செய்தி                   

ஈரோடு,ஆக.16- பிஎஸ்என்எல் மற்றும் தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உடனே சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஈரோட்டில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பெருந்துறை, பவானி பகுதிகளில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு 16-ம் தேதி ஆகியும் சம்பளம் கொடுக்கப்படவில்லை. எனவே கான்ட்ராக்டரை உடனே பட்டுவாடா செய்ய உத்திரவிட வலியுறுத்தியும், மாவட்டம் முழுவதும் பிரதிமாதம் 7-ம் தேதிகுள் அனைவருக்கும் சம்பளம் வழங்கிட கோரியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்ப்ந்த தொழிலாளர் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஈரோடு ஜிஎம் அலுவலகம் முன்பு 16-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொலைதொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாவட்த் தலைவர் என்.சண்முகவேல் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி கண்டன முழக்கம் எழுப்பினார். கோரிக்கைகளை விளக்கி மாநில உதவித் தலைவர் எல்.பரமேஸ்வரன் சிறப்புரை ஆற்றினார்.

ஞாயிறு, 9 மார்ச், 2014

4 வது மாவட்ட செயர்குழு
----------------------------------------

நாள் :   09/03/2014

இடம் :நில அளவயர் சங்கக் கட்டிடம் தாலுக்கா அலுவலகம், ஈரோடு.

தலமை : தோழர்.N.சண்முக வேல் துணை தலைவர் TNTCWU

வரவேற்புரை : தோழர்.K.பழனிச்சாமி மாவட்ட செயலர் TNTCWU

துவக்கவுரை : K.விஸ்வநாதன் மாநில பொருளர் TNTCWUஆய்படு பொருள் 

1) மார்ச் 26 தர்ணா தாயரிப்பு 
2) பயணப்படிக்கான இயக்கம்
3) அடையாள அட்டை சம்பந்தமாக 
4) புதிய உறுப்பினர் சேர்க்கை
5) கிளைமாநாடு நடத்துவது
6) 5 ம் தேதிக்குள் சம்பளம் பெறுவது
7) இன்னபிற தலைவர் அனுமதியுடன் 

மாவட்ட செயலரின் தொகுப்புரை, மாவட்ட  ,கிளை நிர்வாகிகள் உரைக்கு பின் 

வாழ்த்துரை 

தோழர். செல்லமுத்து மாவட்ட துணை தலைவர் TNTCWU
                          தோழர்.சுந்தரக்கண்ணன் மாநில துணை செயலர் TN TCWU
                          தோழர்.C.பரமசிவம் SNAI 
                          தோழர் L.பரமேஸ்வரன் மாவட்ட செயலர் BSNLEU 

நன்றியுரை S.சரவணன் மாவட்ட பொருளர் TNTCWU